திடீர் அன்டிஜன் பரிசோதனைகள்
திடீர் அன்டிஜன் பரிசோதனைகள்

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் பயணிப்போருக்கு திடீர் அன்டிஜன் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தலைமையிலான குழுவினர் நிந்தவூர்ப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களிலும் இந்த அன்டிஜன் பரிசோதனைகளை இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனர்.

குறிப்பாக நிந்தவூர்ப் பிரதேசத்தில் உள்ள முக்கிய வீதிகள்தோறும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை உதாசீனம் செய்து நடமாடுபவர்கள் இந்தப் பரிதோசனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

கடந்த சில தினங்களாக நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை எகிரி வரும் நிலையில் சில மரணங்களும் இதனால் சம்பவித்து வருகின்றன. இந்த நிலையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். பரூஸா நக்பர் கொவிட் சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு பொதுமக்களிடம் கோறிக்கைவிடுத்துள்ளதுடன் கண்டிப்பான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருகின்றார்.

இன்று இடம்பெற்ற திடீர் சமூகத்தொற்று அன்டிஜன் பரிசோதனையின் போது ஒரு சிலர் கொவிட் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திடீர் அன்டிஜன் பரிசோதனைகள்

ஏ.எல்.எம்.சலீம்