
posted 16th August 2021

மன்னார் உதவி தேர்தல்கள் ஆணையாளராக பணிபுரிந்த ஜே.ஜெனிற்றன் வவுனியாவுக்கு இடமாற்றம்
( வாஸ் கூஞ்ஞ) 16.08.2021
மன்னார் மாவட்டத்தின் உதவி தேர்தல்கள் ஆணையாளராகவும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலகராகவும் கடந்த இரண்டரை வருடங்களாக கடமை புரிந்து வந்த ஜே.ஜெனிற்றன் வவுனியாவுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுகின்றார்.
இவர் இரண்டு பொதுத் தேர்தல்களையும் மூன்று வாக்கெடுப்பு மீளாய்வுகளையும்,
அத்துடன் வாக்காளர்களின் நலன் கருதி வாக்கெடுப்பு மாவட்டங்களை அம் மக்களின் தேவைகளுக் கேற்ப 98 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவரின் காலத்தில் தேர்தல்கள் வேளையில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாதிருக்கும் முகமாக தன்னை முழுதாக அர்ப்பணித்து செயல்பட்டு வந்ததை பலரும் பாராட்டியதும் இங்கு குறிப்பிடத்தக்து.
இவர் திருகோணமலையில் உதவி தேர்தல் ஆணையாளராக கடமைபுரிந்து கொண்டிருந்த வேளையிலேயே மன்னாருக்கு இடமாற்றம் பெற்று வந்தார்.
இவர் தற்பொழுது மன்னார் உதவி தேர்தல் ஆணையாளராக இருந்து திங்கள் கிழமை (16.08.2021) மன்னாரிலிருந்து வவுனியா உதவி தேர்தல் ஆணையாளராக இடமாற்றம் பெற்று செல்லுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ