
posted 15th August 2021

நாடாளுமன்றத்தில் நிறை வேற்றிக்கொள்ள முயற்சிக்கப்படும் கொத்தலாவல சட்டத்திற்கு எதிர்பபுத் தெரிவிக்கும் சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் மக்கள் பார்வைக்காக ஒட்டப்பட்டுள்ளன.
மக்கள் விடுதலை முன்னணி, மற்றும் கொத்தலாவல பிரேரணைக்கு எதிரான கூட்டு நிலையம் எனும் பெயர்களில் இச்சுவரொட்டிகள் அமைந்துள்ளன.
“இலவசக் கல்வியை தனியார் மயமாக்குகின்ற, கல்வியை மிலிட்டரி மயமாக்க வழிசமைக்கும் கொத்தலாவல சட்டத்தைச் சுருட்டிக் கொள்” என மக்கள் விடுதலை முன்னணியின் சுவரொட்டியிலும்,
“இலவசக் கல்வியை சீரழிப்பதற்கான மிலிட்டரி பொறியமைப்பினை வகிக்கின்ற கொத்தலாவல பிரேரணையை சுருட்டிக் கொள்” என கொத்தலாவல பிரேரணைக்கு எதிரான கூட்டு நிலைய சுவரொட்டியிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு சுவரொட்டிகளும் ஒருங்கே ஒட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்