
posted 31st August 2021
மன்னார் பட்டித்தோட்டத்தில் இயங்கிவரும் வயோதிபர் இல்லத்துக்கு 74 ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் கொண்ட பொதிகள் தேசிய சமாதான பேரவை மற்றும் தொடர்பாடலுக்கான பயிற்சி மையம் ஆகிய இரண்டும் இணைந்து இவ் உதவியை மேற்கொண்டுள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகளை மன்னார் பிரதேச சர்வ மத பேரவையினர் மேற்கொண்டு கடந்த வெள்ளிக் கிழமை (27.08.2021) மாலை வயோதிபர் மடத்தில் கையளித்தனர்.

வாஸ் கூஞ்ஞ