
posted 21st August 2021
கொவிட்19 தொற்று நோயைக் கட்டுப்படுத்துமுகமாக இலங்கை நாடு முழுவதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10மணி முதல்
எதிர்வரும் 30ஆம் திகதிவரையானா 10 தினங்களுக்கு அரசினால்
மூடப்பட்டுள்ளது. இதனால் யாழ் மாவட்டமும் முற்றாக
முடங்கியுள்ளது. சந்தைகள் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டமின்றி நகரங்கள் பெருந் தெருக்கள் வெறிச்சோடிக்
கிடப்பதைப் பார்க்கக் கூடியதாக உள்ளது.
இதனிடையே வைத்தியசாலைகள், விவசாய நடவடிக்ககள், வீதித் திருத்த வேலைகள் உள்ளிட்ட19 சேவைகள் இயங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது,

எஸ் தில்லைநாதன்