கொறோனா தொற்றாளர்கள் -  வடக்கில் 98, கிளிநொச்சியில் 37, யாழ்ப்பாணத்தில் 33

இன்று, கிளிநொச்சியில் 37 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 33 பேருக்குமாக வடக்கு மாகாணத்தில் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வு கூடத்தில் இன்று (24.08.2021) 460 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 98 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில், பளை மருத்துவ அதிகாரி பிரிவில் 21 பேருக்கும், பளை பிரதேச மருத்துவமனையில் 12 பேருக்கும், கிளிநொச்சி பொது மருத்துவமனையில் 4 பேருக்கும், மொத்தமாக 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 14 பேருக்கும், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் 4 பேருக்கும், சங்கானை மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், பண்டத்தரிப்பு பிரதேச மருத்துவமனையில் 3 பேருக்கும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் இருவருக்கும், சாவகச்சேரி மருத்துவமனையில் இருவருக்கும், சங்கானை பிரதேச மருத்துவமனையில் ஒருவருக்கும், ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையில் ஒருவருக்கும், யாழ்ப்பாணம் மாநகர மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்குமென 33 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் மூவருக்கும், மாங்குளம் ஆதார மருத்துவமனையில் ஒருவருக்கும், புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் ஒருவருக்குமாக 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

வவுனியா பொது மருத்துவமனையில் 5 பேரும், வவுனியா மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும், மாமடுவ பிரதேச மருத்துவமனையில் ஒருவரும், செட்டிக்குளம் ஆதார மருத்துவமனையில் ஒருவருமாக 9 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

மன்னார் பொது மருத்துவமனையில் 7 பேரும், மாந்தை கிழக்கில் மூவரும், தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

இது தவிர, காங்கேசன்துறை கடற்படை முகாமில் நாவல்வர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

கொறோனா தொற்றாளர்கள் -  வடக்கில் 98, கிளிநொச்சியில் 37, யாழ்ப்பாணத்தில் 33

எஸ் தில்லைநாதன்