
posted 17th August 2021
கொரோனா தொற்றால் யாழில் நால்வர் மரணம்!
யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை மட்டும் நான்கு பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தனர். இவர்களில் மூவர் வடமராட்சியை சேர்ந்தவர்களாவர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அச்சுவேலியைச் சேர்ந்த 85 வயது ஆண், பருத்தித்துறையை சேர்ந்த 65 வயது ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.
இதேபோன்று, பருத்தித்துறையை தும்பளையைச் சேர்ந்த 39 வயது ஆண் ஒருவர் உயிரிழந்தார்.
இதேசமயம், உடுப்பிட்டி, இமையாணன் பகுதியில் மயங்கி விழுந்தவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த மரணங்களின் எண்ணிக்கையுடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181ஆக உயர்வடைந்துள்ளது.

எஸ் தில்லைநாதன்