
posted 28th August 2021
கொரோனா தொற்று ஏற்பட்டாலும் உரிய சிகிச்சையின் பின்னர் நோயாளிகள் பூரண சுகம் பெற்று வீடு திரும்பலாமென பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா தெரிவித்துள்ளார்.
கொரொனா தொற்றுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கம்பர்மலை உடுப்பிட்டியை சேர்ந்த 49 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(27) இரவு தொற்று ஏற்பட்டதனால் தனக்கு பயம் ஏற்பட்டதாக தெரிவித்து அங்கு உள்ள கழிப்பறையிலிருந்த திரவம் ஒன்றை அருந்தி உயிரை மாய்த்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா விசாரணையை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டதுடன், சடலத்தை யாழ் மாநகரசபை மின்சார தகனம் சாலையில் எரியூட்டுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
கொரொனா தொற்றாளர்கள் சிகிச்சையின் பின்னர் பூரண குணம் பெற்று வீடு திரும்ப முடியும் எனவும் இவ்வாறான தவறான முடிவு எதனையும் எடுக்க தேவை இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன்