
posted 21st August 2021
யாழ்ப்பாணத்தில் 64 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 113 கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் 687 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்படி, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 57 பேரும், உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேரும், ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையில் இருவரும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒருவரும், காரைநகர் மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவரும் என்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 64 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
வவுனியா மாவட்டத்தில் வவுனியா மருத்துவ அதிகாரி பிரிவில் 16 பேருக்கும், பூவரசங்குளம் பிரதேச மருத்துவமனையில் 4 பேருக்கும், நெடுங்கேணி பிரதேச மருத்துவமனையில் இருவருக்கும், வவுனியா பொது மருத்துவமனையில் ஒருவருக்குமென 23 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
மன்னார் பொது மருத்துவமனையில் 16 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன்குளம் பிரதேச மருத்துவமனையில் 5 பேருக்கும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் இருவருக்கும் தொற்று அடையாளம் காணப்பட்டது.

எஸ் தில்லைநாதன்