
posted 30th August 2021
கடல் மீன்பிடிக்குப் பெயர் பெற்ற அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில், கரைவலை மீன்பிடி ஆரம்பமாகியுள்ளது.
குறிப்பாக நிந்தவூர் காரைதீவு மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, ஒலுவில், முதலான பிரதேசங்களில் தற்சமயம் கடற்றொழில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அண்மைய விவசாய அறுவடை நடவடிக்கைகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அறுவடை வேலைகள் முடிவுற்றுள்ளதால், அன்றாட தொழிலுக்காகத் தற்பொழுது கடற்றொழிலை நாடிவருகின்றனர்.
அதிலும் பெருமளவானோர் கரைவலை மீன்பிடித்தொழிலை நாடி வருவதால் மீன்படி நடவடிக்கைகள் தினமும் இடம்பெற்று வருகின்றன.
எனினும் பாரிய அளவில் மீன்பிடி இடம்பெறாத போதிலும், சிறியரக மீன்கள் பிடிபடத் தொடங்கியுள்ளன.
இதனால் கடற்றொழிலாளர்களின் நாளாந்த வருமானம் குறைந்துள்ள போதிலும், தொழிலின்றி வீட்டில் முடங்கிக் கிடக்காது, குறித்த கரைவலை மீன்பிடித்தொழிலில், கடற்றொழிலாளர்கள் சலியாது ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்