கத்திக்குத்தால் ஒருவர் கொலை
கத்திக்குத்தால் ஒருவர் கொலை

சகோதரிகளின் கணவர்மார்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டிதுறைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை(16.08.2021) இரவு 11 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் வல்வெட்டியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் கிரிசாந் (வயது- 32) என்பவரை உயிரிழந்தவராவார். உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரியின் கணவருக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதன்போது ஏற்பட்ட குத்தில் படுகாயங்களுக்கு உள்ளான நபர் வல்வெட்டித்துறை, ஊறணி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளது.

கத்திக்குத்தால் ஒருவர் கொலை

எஸ் தில்லைநாதன்