
posted 25th August 2021
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நிந்தவூர் பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக இலங்கை நிருவாக சேவை தரம் - I ஐச் சேர்ந்த சட்டத்தரணி ஏ.எம்.அப்துல்லதீப், இன்று (25 புதன்) முதல் கடமைப் பொறுப்பேற்றுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் மேலதிக மாவட்ட செயலாளராக கடந்த இரண்டரை வருடங்களாக சிறப்புறக்கடமையாற்றி வந்த நிருவாக சேவை அதிகாரி அப்துல்லதீப் மாவட்டத்தில் இடம் பெற்ற ஐந்து நிருவாக சேவை அதிகாரிகளின் (பிரதேச செயலாளர்கள்) இடமாற்றங்களுடன் இணைந்து இடமாற்றம் பெற்று நிந்தவூர் பிரதேச செயலாளராகப் பதவி ஏற்றுள்ளார்.
புதிய பிரதேச செயலாளர் அப்துல் லதீப் இன்று நிந்தவூர் பிதேச செயலகத்தில் பிரதேச செயலாளராகக் கடமைப் பொறுப்பேற்க வருகை தந்த போது, செயலக உத்தியோகத்தர்கள் சிறப்புற வர வேற்றனர்.
இதன்போது அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் எஸ்.ஜெகதீஸன், நிந்தவூர் உதவி பிரதேச செயலாளர் ஜெகான் தாஹிர், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களான நிருவாக உத்தியோகத்தர் எம்.ரீ.எம்.சரீம், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.சுல்பிகார், மேலதிக மாவட்டப் பதிவாளர் ஏ.எம்.எம்.கான், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் சட்டத்தரணி, எம்.எம்.முபீன், கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர் ஏ.எல்.பைரூஸ், மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர், அனிஸ், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் எச்.பி.தௌபீக் உட்பட மேலும் பல உத்தியோத்தர்களும் பிரசன்னமாக விருந்தனர்.
தொடர்ந்து பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.சுல்பிகார் தலைமையில், புதிய பிரதேச செயலாளரை வரவேற்கும் கூட்ட நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்