
posted 20th August 2021

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக இலங்கையின் வட பகுதிக்கு கடத்திவரப்பட்ட 168 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
வடபகுதி கடற்பரப்பில் கடற்படையினர்இன்று வெள்ளிக்கிழமை (20.08.2021) அதிகாலை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த படகு ஒன்றை தொண்டமனாறு கடற்பரப்பில் கடற்படையினர் மறித்து சோதனையிட்டனர். அப்படகில் பொதி செய்யப்பட்ட நிலையில் 168 கிலோகிராம் கஞ்சா காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து படகில் இருந்த மாமுனை செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த ஒருவரும், சிலாவத்துறையைச் சேர்ந்த இருவருமாக மூவரை கைது செய்து காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்