
posted 29th August 2021
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் சில நாள் காய்ச்சல் ஏற்பட்டு மூச்சுத்திணறல் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (29.08.2021) வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த வயோதிப மாது ஒருவரும் இன்று (29.08.2021) காலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார் இருவரிடமும் பெறப்பட்ட அதிவிரைவு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்