
posted 27th August 2021
சேதன பசளையை எவ்வாறு வீட்டுத் தோட்டத்திற்கும் பயன்படுத்த முடியும் என்பதனை வட மாகாண விவசாய திணைக்களமும், மத்திய விவசாய திணைக்களமும் இணைந்து மன்னார் மாவட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் பலன் பலர் வீட்டுத்தோட்டம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வீட்டுத்தோட்ட பயிர் செய்கைக்கான வீட்டுத்தோட்டத்தில் அரச சுற்று நிருபத்துக்கு அமைவாகவும் மற்றும் அரசின் கொள்கை திட்டத்துக்கு ஏற்றவாறும் சேதன பசளை பாவனையை விவசாயிகள் மற்றும் வீட்டுத்தோட்ட செய்கையாளர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் நோக்குடன் ஒலிபெருக்கி மூலம் விழப்புணர்வு செயல்பாடுகள் மன்னார் மாவட்டத்தில்
இடம்பெற்று வருகின்றது.
இவ்விழிப்புணர் வானது, மன்னார் தீவில் மன்னார் நகர், பேசாலை, சின்னகரிசல், பெரிய கரிசல் மற்றும் மன்னார் பெரும் நிலப்பரப்பில் மாதோட்டப் பகுதிகளான அடம்பன், மாந்தை, திருக்கேதீஸ்வரம், ஆண்டான்குளம், நானாட்டான், முசலி பகுதி மற்றும் மடு பகுதிகளிலும் ஒரு நடமாடும் சேவையாக இடம்பெற்று வருகின்றது.
நாடு தற்பொழுது முடங்கியிருக்கும் இவ் வேளையில் இவ்வாறான சேதன பசளை மூலம் விவசாயம் செய்ய தூண்டப்பட்டு வருவதால் பலர் தங்கள் வீடுகளில் வீட்டுத்தோட்டங்கள் செய்வதில் விழிப்பணர்வு கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாஸ் கூஞ்ஞ