
posted 22nd August 2021
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மற்றொரு முதியவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு இன்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது அவருக்கு தொற்று காணப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 79 வயதுடைய இராசையா நாகசந்திரா என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்