
posted 27th August 2021
யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரும் கொழும்புத்துறையைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்தனர்.
இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 220ஆக உயர்வடைந்துள்ளது.

எஸ் தில்லைநாதன்