முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆனுதாபச் செய்தி

முன்னாள் அமைச்சரும், தமிழ் மக்களின் உண்மையுள்ள நண்பருமான
திரு.மகள சமரவீரவின் எதிர்பாராத மறைவுக்கு தமிழ் தேசியக்
கூட்டமைப்பினராகிய நாம் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்
கொள்கிறோம். 1989 இல் அரசியலில் கால் பதித்த திரு. சமரவீர, 1994 இல்
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரஸ்துங்காவின் அரசாங்கத்தில்
அமைச்சராக பொறுப்பேற்றார். மேலும் தமிழ் தேசிய பிரச்சினைக்கான
அரசியல் தீர்வுக்காக பிரச்சாரம் செய்யும் "சுது நெலும்" இயக்கத்தினையும்
முன்னெடுத்துச் சென்றார். அவர் இறக்கும் வரையிலும் தனது
இனவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் தொடர்ந்திருந்தார்.
திரு. சமரவீர,புலிகளுடனான போர் நடாத்தப்பட்ட முறைக்கு எதிர்ப்பு
தெரிவித்த காரணத்தினால் தனது அமைச்சரவை பதவியினை இழக்க
நேரிட்டது. பின்னர் அவர் 2015 இல் வெளிவிவகார அமைச்சராக மீண்டும்
பதவியேற்று, ​​நீதி, பொறுப்பு மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி அயராது
உழைத்தார். இன, மொழி, சாதி, மதம், அல்லது நம்பிக்கை
வேறுபாடுகளாலுக்கப்பால் ஒவ்வொரு குடிமகனும் சமமாக நடத்தப்படும் ஒரு
இலங்கையே அவரது தரிசனமாக காணப்பட்டது. மங்கள சமரவீரவின்
மரணம் நம் அனைவருக்கும் ஈடுசெய்யமுடிய பாரிய இழப்பாகும்.

ம.ஆ.சுமந்திரன்
பேச்சாளர்
தமிழ் தேசிய கூட்டமைப்பு

The Tamil National Alliance express our deep sorrow at the untimely passing away of Mr. Magala Samaraweera, former minister and truthful friend of the Tamil People. Mr. Samaraweera entered politics in 1989, and became a minister in 1994 in the government of President Chandrika Bandaranayeka Kumarasthunga and lead the “Sudu Nelum” movement campaigning for a political solution to the Tamil National Question. He continued with his Anti – communalist stand right until his death.

Mr. Samaraweera lost his cabinet portfolio because he protested at the way the war with the LTTE was being prosecuted. Later when he regained his position as foreign minister in 2015, he tirelessly worked towards Justice, accountability and reconciliation. His vision for Sri Lanka was one where every citizen was equal irrespective of ethnic, language, race, religion, orientation or belief. Mangala Samaraweera’s death is a great loss to all of us.

M.A. Sumananthiran
Spokes person
Tamil National Alliance

හිටපු අමාත්‍ය සහ දෙමළ ජනතාවගේ සත්‍ය මිතුරෙකු වූ මංගල සමරවීර මහතා අකාලයේ අභාවප්‍රාප්ත වීම පිළිබඳව දෙමළ ජාතික සන්ධානය අපගේ බලවත් කණගාටුව ප්‍රකාශ කර සිටිමු. 1989 දී දේශපාලනයට පිවිසි සමරවීර මහතා 1994 දී ජනාධිපතිනි චන්ද්‍රිකා බණ්ඩාරනායක කුමාරතුංගගේ රජයේ ඇමතිවරයෙකු වී දෙමළ ජාතික ප්‍රශ්නය සඳහා දේශපාලන විසඳුමක් සඳහා වූ සුදු නෙළුම් ව්‍යාපාරයේ නායකත්වය දැරීය. ඔහු මිය යන තුරුම ඔහුගේ වාර්ගික විරෝධී ස්ථාවරය අනුගමනය කළේය.

එල්.ටී.ටී.ඊ.ය සමඟ පැවති යුද්ධය පවරන ආකාරයට විරෝධය දැක්වූ නිසා සමරවීර මහතාට කැබිනට් ඇමති ධුරය අහිමි විය. පසුව 2015 දී නැවත විදේශ ඇමති ධුරයට පත් වූ ඔහු යුක්තිය, වගවීම සහ සංහිඳියාව සඳහා වෙහෙස නොබලා කටයුතු කළේය. ජනවාර්ගික, භාෂා, වාර්ගික, ආගම්, දිශානතිය හෝ විශ්වාසය නොසලකා සෑම පුරවැසියෙකුම සමාන වූ ඔහුගේ ශ්‍රී ලංකාව පිළිබඳ දැක්ම විය. මංගල සමරවීරගේ අභාවය අප සැමට බලවත් පාඩුවක්.

එම්.ඒ සුමන්තිරන්
ප්‍රකාශක
දෙමළ ජාතික සන්ධානය

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆனுதாபச் செய்தி

எஸ் தில்லைநாதன்