மாவட்டங்களில் கொறோனாவின் தொற்றும் இறப்பும் அதிகரிக்கின்றது
மாவட்டங்களில் கொறோனாவின் தொற்றும் இறப்பும் அதிகரிக்கின்றது

யாழ்ப்பாணத்தில் 105 பேர் உட்பட வடக்கில் நேற்று புதன் கிழமை 42 தொற்றாளர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 105 தொற்றாளர்கள் உட்பட வடக்கு மாகாணத்தில் 142 தொற்றாளர்கள் நேற்று புதன்கிழமை அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் 793 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 144 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்படி, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 46 பேரும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 27 பேரும், உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் 13 பேரும், யாழ்ப்பாணம் மாநகர மருத்துவ அதிகாரி பிரிவில் 9 பேரும், சங்கானை பிரதேச மருத்துவமனையில் 4 பேரும், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் 3 பேரும், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் ஒருவரும், பண்டத்தரிப்பு பிரதேச மருத்துவமனையில் ஒருவரும், புங்குடுதீவு பிரதேச மருத்துவமனையில் ஒருவரும், என யாழ். மாவட்டத்தில் 105 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில், அக்கராயன்குளம் பிரதேச மருத்துவமனையில் 11 பேர், கிளிநொச்சி பொது மருத்துவமனையில் 4 பேர் என 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

வவுனியா பொது மருத்துவமனையில் ஒருவர், செட்டிக்குளம் ஆதார மருத்துவனையில் ஒருவர், வவுனியா மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர், வவுனியா வடக்கு மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேர் என்று வவுனியா மாவட்டத்தில் 9 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

மன்னார் மாவட்டத்தில், பொது மருத்துவமனையில் 8 பேருக்கும், முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் 2 பேருக்கும், புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் ஒருவருக்கும், மாந்தை கிழக்கு மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் என நான்கு பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இவை தவிர, மன்னார் கடற்படை முகாமில் இருவருக்கும், காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவருக்கும் தொற்று அடையாளம் காணப்பட்டது.


வடக்கில் 250 ஐ கடந்தது - தொற்றாளர் பலி!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொற்றாளி ஒருவர் நேற்று புதன்கிழமை மரணமானார். இதையடுத்து, வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250ஆக உயர்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் - கனகரத்தினம் வீதியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டங்களில் கொறோனாவின் தொற்றும் இறப்பும் அதிகரிக்கின்றது

எஸ் தில்லைநாதன்