
posted 21st August 2021

மன்னாரில் ஆவணி மாதம் இதுவரைக்கும் கொரோனா தொற்றாளார்களின் தொகை 356 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை (20.08.2021) மன்னார் மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்துக்கு கிடைக்கப் பெற்ற தகவலின்படி மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களாக 29 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்கள்.
இது தொடர்பாக மன்னார் பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தெரிவித்திருப்பதாவது
மன்னார்ரில் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் மற்றும் அன்றிஜீன் பரிசோதனையில் 20.08.2021 அன்று வெள்ளிக்கிழமை கிடைக்கப்பெற்ற விபரத்தின்படி 29 நபர்களுக்கு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.
இதன்படி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 16 நபர்களுக்கும், சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 13 நபர்களும் இக் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சமூக மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் முசலி பிரதேச செயலகத்தில் 04 நபர்களும், நானாட்டான் பிரதேச சபை பிரிவில் 02 நபர்களும், விடத்தல்தீவு மற்றும் தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் தலா 02 நபர்களும், ஆடை தொழிற்சாலையில் 02 பேரும், முருங்கனில் 01 நபரும் ஆகிய பகுதிகளிலேயே இவர்கள் இனம் காணப்பட்டவர்களாவர்.
இதுவரைக்கும் மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 1397 கொரோனா தொற்றாளர்களாக காணப்பட்டுள்ளனர். இந்த மாதம் அதாவது ஆவணி மாதம் இதுவரைக்கும் கொரோனா தொற்றாளார்களின் தொகை 356 ஆக உயர்ந்துள்ளது.
சமூகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிசீஆர் பரிசோதனையில் தற்பொழுது மன்னார் பகுதியில் நூற்றுக்கு 4.95 (அண்ணளவாக 5%) என்ற விகிதாசரமாக காணப்படுகின்றது.
இந்த மாதம் (ஆவணி) இதுவரைக்கும் 1573 பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் 53 பிசீஆர் பரிசோதனை முடிவுகள் நிலுவையில் இருப்பதாகவும் இன்றைய நாளில் (20.08.2021) எவருக்கும் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லையென பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ