
posted 16th August 2021

மன்னாருக்கு புதிய உதவி தேர்தல்கள் ஆணையாளராக கே.விமலரூபன் பதவியேற்பு
மன்னார் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளராகவும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலகராகவும் கே.விமலரூபன் இடமாற்றம் பெற்று வந்துள்ளார்.
மன்னார் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளராகவும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலகராகவும கடமைபுரிந்து வந்த ஜே.ஜெனிற்றன் வவனியாவுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதைத் தொடர்ந்து இவரின் இடத்துக்கு மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளராக கே.விமலரூபன் இடமாற்றம் பெற்று வந்துள்ளார்.
திங்கள் கிழமை (16.08.2021) முதல் தனது பதவியை பொறுப்பேற்றுள்ள கே.விமலரூபன் இவர் ஹெப்பற்றிக்கொல்லாவில் உதவி பிரதேச செயலாளராக கடமைபுரிந்து கொண்டிருந்த வேளையில் தற்பொழுது மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பேராதனை பல்கலைக்கழக கலைமானி பட்டதாரியான இவர் ஐந்து வருடகால அரச சேவை அனுபவங்களை கொண்டவராவருமாவார். என்பதும் குறிப்பிடத்தக்கது.(

வாஸ் கூஞ்ஞ