
posted 25th August 2021
யாழ்ப்பாணம் தென்மராட்சியின் கொடிகாமம் பிரதேசத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்கள் மூவர் இன்று உயிரிழந்துள்ளனர்.
கொடிகாமம் மத்தி, கெற்பேலி, அல்லாரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 47, 70, 80 வயதுடைய மூவரே உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் 47 வயதானவர் கொடிகாமம் சந்தைத் தொகுதிக்குள் தையல் கடை வைத்திருப்பவர் என்று தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் இருவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, சாவகச்சேரி நகரில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சங்கானையில் பிரதேச செயலர் உள்ளிட்ட 29 பேருக்கு கொரோனா தொற்று
யாழ்ப்பாணம் சங்கானையில் இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையில் 29 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
பிரதேச செயலர், கிராம அலுவலர் ஒருவர் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர் உட்பட 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எஸ் தில்லைநாதன்