
posted 26th August 2021

இலங்கை நாடு தற்பொழுது கொரோனா தொற்று நோயின் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்திருக்கும் இவ்வேளையில் கொரோனா இவ்விடர் காலத்தில் விலைவாசி மலை போல் உயரந்துள்ள இவ்வேளையிலே வறுமைக்கோட்டிலுள்ள மக்களின் தேவைகளை உணர்ந்து அவுஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் வசிக்கும் நல்லுள்ளங்கள் சுலோஜினி நடராஜா ஊடாக அத்தியாவசிய உணவுப் பொதிகள் வழங்கினார்கள்.
வியாழக் கிழமை (26.08.2021) காலை ஐயாயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் மிகவும் பின்தங்கியுள்ள கிராமமான மன்னார் மாவட்டத்தின் மடுக்கரை குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த 68 குடும்பங்களுக்கே இவைகள் வழங்கப்பட்டன.
குறிஞ்சி நகர் கிராம சேவையாளர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ