
posted 24th August 2021
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாட்டின் முடக்க நிலையால் எந்த ஒரு அரசு சலுகைகளும் பெறாதவர்களுக்கும் பாதிக்கப்பட்டுள்ள தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ள குடும்பங்களுக்கும் அரசால் வழங்கப்படும் நிதியானது மன்னார் மாவட்டத்துக்கு 15.3 மில்லியன் தேவைப்படுவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரால் ஜனாதிபதி செயலகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை (20.08.2021) தொடக்கம் தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கு இலங்கை நாட்டில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ள அன்றாடம் தங்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அரசால் இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவுகள் திங்கள் கிழமை (23) முதல் வழங்கப்பட்டு வருகின்து.
இத் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர். நானாட்டான், முசலி, மடு மற்றும் மாந்தை மேற்கு ஆகிய ஐந்து பிரதேச செயலகங்களிலிருந்தும் 7680 குடும்பங்கள் இந் நிதியை பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தொவிக்கப்படுகின்றது.
இதற்காக 15.3 மில்லியன் ரூபா நிதியாக மன்னார் மாவட்டத்துக்கு தேவைப்படுவதாகவும் இதில் தற்பொழுது 2 மில்லியன் ரூபா மன்னார் மாவட்டத்துக்கு கிடைக்கப் பெற்று அவைகள் உடன் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
மிகுதி பணத்தை பெறுவதற்கான நடவடிக்கை தற்பொழுது மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவைகள் கிடைத்தவுடன் உடன் தெரிவு செய்யப்பட்டுள்ள பயணாளிகளுக்கு வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ