கொடிகாமச் சந்தை நாளை தொடக்கம் மூடப்படும்
கொடிகாமச் சந்தை நாளை தொடக்கம் மூடப்படும்

கொடிகாமம் சந்தையில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து நாளை செவ்வாய்க்கிழமையில் (17.08.2021) இருந்து கொடிகாமம் சந்தை தற்காலிகமாக மூடப்படுகின்றது. கொடிகாமம் சந்தையில் வியாபாரிகளிற்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கடந்த சனிக்கிழமை (14.08.2021) 17 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

ஆனால் தொடர்ந்தும் சந்தை இயங்கி வந்த நிலையில் இன்று திங்கட்கிழமை(16.08.2021) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 13 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

ஆக மொத்தமாக 30 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து கொடிகாமம் சந்தை தற்காலிகமாக நாளையிலிருந்து (17/08/2021) மூடப்படுகிறது.

தொற்று அற்றவர்களிற்கு அனுமதி அட்டை நடைமுறைகள் மூலம் வியாபாரம் செய்வதற்கு ஏதுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொடிகாமச் சந்தை நாளை தொடக்கம் மூடப்படும்

எஸ் தில்லைநாதன்