
posted 14th August 2021

ஐந்து கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்களுடன் மூவர் கைது
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்களுடன் மூவர் வல்வெட்டித்துறை கடற்கரையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இன்று சனிக்கிழமை (14) அதிகாலை 4.15 மணியளவில் வல்வெட்டித்துறை கடற்கரை வீதியில் வைத்து போதைப்பொருட்களை வாகனம் ஒன்றில் ஏற்ற முற்பட்ட போதே அவற்றை கடற்படையினர் கைப்பற்றினர்.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கடற்கரை பகுதியில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போதே மகேந்திரா ரக வாகனத்தில் கடத்த முற்பட்ட 126 கிலோக்கிராம் கேரளக் கஞ்சா மற்றும் 2.320 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருள் என்பன கைப்பெற்றப்பட்டன.
போதைப் பொருட்களை கடத்த முற்பட்ட மாங்குளம், இரணைமடு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.


எஸ் தில்லைநாதன்