
posted 16th August 2021

வட மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 இலட்சத்து 32 ஆயிரத்து 155 பேர் கோவிட் - 19 தடுப்பூசி பெற்றுக்கொண்டனர். இது 30 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 80.93 வீதமாகும் என்று வட மாகாண சுகாார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் சனிக்கிழமை இரவு வரையான தரவின் பிரகாரமே இந்த விடயத்தை அவர் தெரிவித்தார்.
இதில், ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 81 பேர் இதுவரை இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். மாகாணத்தின் 30 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் இது 23.19 வீதமாகும்.
யாழ்ப்பாணத்தில், 2 இலட்சத்து 78 ஆயிரத்து 456 பேரும், கிளிநொச்சியில் 58 ஆயிரத்து 734 பேரும், மன்னாரில் 59 ஆயிரத்து 14 பேரும், முல்லைத்தீவில் 53 ஆயிரத்து 513 பேரும், வவுனியாவில் 82 ஆயிரத்து 418 பேரும் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்