
posted 15th August 2021

நாய் கடித்ததாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் நாகர்கோவில் கிழக்கு, நாகர்கோவிலைச் சேர்ந்த ஜீவரத்தினம் திருச்செல்வா (வயது -29) என்பவராவார்.
சில தினங்களுக்கு முன்னர் இவருக்கு விசர் நாய் கடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (14) இரவு வலிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) முற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பீ.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் இம் மரணம் தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா விசாரணைகளை மேற்கொள்வார்
குறிப்பு: யாழ் மாவட்டத்தில் வடமராட்சி கிழக்குப் பகுதியில் நாகர்கோவில் கிராமம் அமைந்துள்ளது

எஸ் தில்லைநாதன்