
posted 23rd April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஹர்த்தாலுக்கு ஆதரவு தருமாறு ரெலோ இளைஞர் அணி அழைப்பு - சபா குகதாஸ்
சிங்கள பேரினவாத அரசாங்கம் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் சட்டரீதியற்ற காணி அபகரிப்பு, பௌத்த மயமாக்கல், சைவக் கோவில்கள் அழிப்பு, தொல்லியல்களை மாற்றியமைத்தல் போன்ற செயற்பாடுகளை நிறுத்தக் கோரியும், பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதுடன் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மீளப் பெறுமாறும் 25 ந் திகதி செவ்வாய்க் கிழமை தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய முழுமையான ஹர்த்தாலுக்கு அனைவரையும் ஒத்துழைப்பு தருமாறு வடகிழக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளும் சமூக மற்றும் மத அமைப்புக்களும் கூட்டாக முடிவெடுத்து அழைத்துள்ளனர்.
அந்த வகையில் வடக்கு கிழக்கு எட்டு மாவட்டங்களையும் பிரதி நிதித்துவம் செய்யும் தேசியக் கட்சியாகிய தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அதன் இளைஞர் அணி இந்த முழுமையான ஹர்த்தாலுக்கு அனைவரும் ஆதரவு நல்குமாறு அழைக்கின்றோம் என ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
சிங்கள பேரினவாத அரசின் தொடர்ச்சியான அடக்கு முறை தொடர்கிறது என்பதை முழு உலகிற்கும் அனைத்து மக்களின் வெளிப்பாடாக வெளிப்படுத்த இந்த பொது முடக்கத்திற்கு உரிமையுடன் ஒத்துழைப்பு தருமாறு அனைவரிடமும் வேண்டுகின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)