
posted 4th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வீடு மற்றும் சொத்துக்கள் எரிந்து நாசம்
கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் வீட்டுக்கு தீ வைத்த நபர்களால் வீடு மற்றும் சொத்துக்கள் எரிந்து நாசமடைந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று (03) திங்கள் இரவு இடம்பெற்றுள்ளது.
இனந்தெரியாத நபர்கள் குறித்த வீட்டுக்கு ரயர் இட்டு தீ வைத்துள்ளனர். இதேவேளை வீட்டின் பிரதான வாயில் வாளினால் வெட்டப்பட்டும் உள்ளது.
குறித்த சம்பவத்தில் வீடு முழுமையாக எரிந்து தீக்கிரையானதுடன், வீட்டு உபகரணங்களும் எரிந்துள்ளது. இதேவேளை, களஞ்சியப்படுத்தப்பட்ட நெல்லுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அண்மையில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரின் வீடே இவ்வாறு தீக்கிரையானது. குறித்த வீட்டில் எவரும் வசிக்காத நிலையில், குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, தடயவியல் பொலிசாரும், குற்றத்தடுப்பு பொலிசாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்போது, வீடு உடைக்கப்பட்டு ரயரிட்டு வீடு கொழுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)