
posted 26th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வித்தியாரம்ப விழா
சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலயத்தில் சாதனை படைக்க வரும் தரம் 1 மாணவர்களை அன்போடு வரவேற்கும் வித்தியாரம்ப விழா மிகக் கோலாகலமாக அதிபர் அஷ்ஷேஹ் எம்.ஐ.எம். கலீல் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எஸ். உமர் மௌலனா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில், விசேட அதிதிகளாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையின் கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளரும், சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஏ. எல். மஜீட், திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஏ.சி. நுஸ்ரத் நிலோபறா, கௌரவ அதிதியாக மௌலவி எம்.ஐ.எச். பஷீர், தாறுல் உலூம் வித்தியாலய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பாடசாலைக் கல்வியை ஆரம்பிக்கும் தரம் 1 மாணவர்களுக்கு இதன்போது அதிதிகளினால் கிரீடம் மற்றும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதோடு தரம் இரண்டு மாணவர்கள் அம்மாணவர்களை வரவேற்றனர்.
மேலும் இதன்போது தரம் 1 மாணவர்களுக்கு அதிதிகளினால் மணல் தட்டில் எழுதப் பழக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
அத்தோடு இம்மாணவர்களை மகிழ்விக்கும்வகையில் கலை கலாசார நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)