வவுனியாவில் மேதினக் கூட்டம் - வருகிறது தீர்மானங்கள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வவுனியாவில் மேதினக் கூட்டம் - வருகிறது தீர்மானங்கள்

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு மே தினக் கூட்டமும், வருடாந்தப் பொதுக் கூட்டமும் முதல் தடவையாக வடமாகாணத்தில் இடம் பெறவிருக்கின்றது.

கல்முனையில் தலைமைச் செயலகத்தைக் கொண்டு இயங்கிவரும் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம், தமது வடமாகாணத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், முக்கியஸ்தர்களின் நீண்டகால கோரிக்கையின் பிரகாரம் இம்முறை சங்க மே தினக் கூட்டத்தையும், வருடாந்தப் பொதுக் கூட்டத்தையும் வடக்கில் நடத்துவதற்கு முன் வந்துள்ளதாக சங்கத்லைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார்.

இதன்படி எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி வவுனியா நகர மண்டபத்தில் சங்கத்தின் 30ஆவது மே தினக் கூட்டமும், வருடாந்தப் பொதுக் கூட்டமும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் நடைபெறவிருக்கம் இந்த மே தினக் கூட்டத்திலும், வருடாநதப் பொதுக் கூட்டத்திலும் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருச் செல்வம் தினேஸ்குமார் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். அத்துடன் வவுனியா நகர சபைச் செயலாளர் திருமதி. வி.நிஸங்க கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்வார்.

மேலும், வவுனியாவில் நடைபெறவிருக்கும் மேற்படி மே தினக்கூட்டம் மற்றும் வருடாந்தப் பொதுக் கூட்டத்திற்சகான பூர்வாங்க ஏற்பாடுகளை சங்கத்தின் வடமாகாண இணைத்தலைவர் ஏ. புண்ணிய மூர்த்தி, வட மாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கான இணைப்பாளர் ஆர். சூரியகுமார் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த மே தினக் கூட்த்தின் தீர்மானங்களாக பின்வரும் முக்கிய தீர்மானங்களாக நிறைவேற்றப்படவுள்ளதாகவும் லோகநாதன் கல்முனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

தீர்மானங்கள்:

  • புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக வடக்கும், கிழக்கும் இணைந்த மாநில சுயாட்சி வழங்கப்பட வேண்டும்.
  • சகல அரசாங்க உழியர்களுக்கும் தற்போதைய வாழ்க்கைச் செலவு, பொருளாதார பிரச்சினைகளைக் கருதி 25 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.
  • சகல ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கும் 15 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.
  • வட கிழக்கு மாகாணங்களுக்கு தமிழ் பேசும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
  • மக்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து அரசு கொண்டுவர விருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
  • அரச சேவையில் தற்காலிக மற்றும் சமயா, சமய அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கான புதிய அரச நிருவாக சுற்று நிருபம் வெளியிடப்பட வேண்டும்.
  • முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டி சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்கும் தனிப் பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும்.
  • 225 வருடங்கள் பழமை வாய்ந்த கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையைப் போதனா வைத்தியசாலையாகத் தரமுயர்த்த வேண்டும்.
  • 33 வருடங்களாக செயற்பட்டுவரும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாகத்தரமுயர்த்தி வர்த்தமானி வெளியிடப்பட வேண்டும்.
  • வடகிழக்கில் பல தரப்பட்ட இன்னல்களுக்கு மத்தியில், உள்ளுராட்சி மன்றங்களில் கடமையாற்றிவுரும் பணியாளர்களின் கோரிக்கைளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இந்த தீர்மானங்களை சங்கத்தின் மே தினத்தீர்மானங்களாகப் பிரகடனப்படுத்துவதற்கு சங்க உயர்பீடக் கூட்த்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் லோகநாதன் குறிப்பிட்டார்.

வவுனியாவில் மேதினக் கூட்டம் - வருகிறது தீர்மானங்கள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)