
posted 26th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் மாணவர்களினால் மாபெரும் போராட்டம்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், மாணவர் சமூகத்துக்கும் பாரதூரமானது என்பதுடன், அதனைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் முன்வந்தால், வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் மாணவர்களினால் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூட்டத்தில் நேற்று (25) செவ்வாய் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
44 வருடமாக எங்கள் மக்களை அடக்கி ஒடுக்கிக்கொண்டிருந்த பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாறாக இப்பொழுது ஒரு சட்டமூலம் வந்திருக்கின்றது .
அந்த சட்டம் மூலம் எங்களை அடக்குவதற்கான சட்டமூலமே. அதாவது, ஒரு மனிதன் சுதந்திரமாக ஜனநாயக ரீதியாக தன்னுடைய கருத்தை தெரிவிப்பதற்கு எதிராக கடுமையாக இயற்றப்பட்ட சட்டமூலமாகவே இந்த சட்ட மூலம் காணப்படுகிறது.
மாணவர் சமூகத்தை பாரியளவில் இச் சட்டமூலம் பாதித்திருக்கின்றது. எங்களுடைய மக்களின் குரல் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் மூலம் நசுக்கப்படுகின்து.
மேலும், ஜனநாயக ரீதியாக போராடுகின்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டு இதன் மூலம் அச்சுறுத்தப்படுகின்றார்கள். அந்த வகையிலே இந்த புதிதாக உருமாறி வரவிருக்கின்ற சட்டமூலத்தை சர்வதேசம் தலையிட்டு நிறுத்தவேண்டும். இதனை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முற்றாக எதிர்க்கின்றது என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)