வடக்கு - கிழக்கில் தமிழர்களின் இருப்பை அழிக்கும் திட்டம்

துயர் பகிர்வோம்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வடக்கு - கிழக்கில் தமிழர்களின் இருப்பை அழிக்கும் திட்டம்

வடக்கு - கிழக்கில் தமிழர்களின் இருப்பை அழிக்கும் திட்டமிட்ட செயல்பாடுகளைக் கண்டித்தும் அதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் கண்டனப் போராட்டம் சனிக்கிழமை (01) சங்கானையில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தலைமையில் சங்கானை சந்தியில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள்,

  • “வெடுக்குநாறி மலை எங்கள் சொத்து”

> “கன்னியா எங்கள் சொத்து”

  • “நெடுந்தீவு எங்கள் சொத்து”
  • “கச்சதீவு எங்கள் சொத்து”
  • “அழிக்காதே அழிக்காதே தமிழினத்தை அழிக்காதே”

> “தொல்லியல் திணைக்களமே வெளியேறு”

  • “வெளியேறு வெளியேறு படைகளே வெளியேறு”
  • “எங்கே எங்கே உறவுகள் எங்கே”
  • “தமிழர்களின் தீர்வு சுயாட்சியே”
  • “எடுப்பது பிச்சை அறுப்பது எங்களின் கழுத்தையா”

போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்ததுடன், அது சார் கோஷங்களையும் எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு - கிழக்கில் தமிழர்களின் இருப்பை அழிக்கும் திட்டம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)