
posted 1st May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offe
மேதினச் செய்திகள்
சமூக ஒற்றுமையுடன் எதிர்காலத்தை தூக்கி நிறுத்த உழைப்பாளர் தினத்தில் உறுதிபூணுவோம் – யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி தெரிவிப்பு!
உழைப்பவர்களே உலகின் உன்னதமானவர்கள். அதனால் தான் அவர்களின் உன்னத உழைப்பின் மகிமையை போற்று இந்த உழைப்பாளர் நாள் உலகமெங்கும் மே மாதம் இன்றைய நாளில் அனுஸ்டிக்கப்படுகின்றது என யாழ் மாநகரசபையின் முன்னாள் முல்வர் திருமதி யோகேஸ்வரி பற்கணராஜா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உழைப்பாளர் தின கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்;
எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தளவில் அதன் ஒவ்வொரு துறைசார் வேலைகளை எடுத்துக் கொண்டாலும் அதை மேற்கொள்பவரது உழைப்பு, உழைப்பின் வெகுமதியாகவே பார்க்கப்படுகின்றார்கள்.
அதுமட்டுமல்லாது அவர்களது உழைப்பிற்கேற்ற வகையில் அவரவர் பொறுப்புகளும் வாய்ப்புகளும் அவர்களை சென்றடைகின்றன.
யாழ் மாவட்டத்தை பொறுத்தளவில் குறிப்பாக யாழ் மாநகர அதிகாரத்துக்குள் துரையப்பாவின் காலத்துக்கு பின்னர் இன்றுவரை வறிய நிலையிலுள்ள பாமர மக்களுக்கு பாரபட்சமின்றி அரச தொழில் வாய்ப்புகளை வழங்குவதானாலும் சரி அவர்களுக்கான அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார தேவையாக இருந்தாலும் சரி அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளானாலும் சரி அவற்றுக்கெல்லாம் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் எமது கட்சியும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் மட்டுமே உரிமையாளர்களாக இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது எமது தேசத்து பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பொருளாதார பிரச்சினைகள் என பல்வேறு தேவைகளுக்கும் ஆண்களுக்கு சரிநிகரான சந்தர்ப்பங்கள் வழங்கி பெண்களை அவர்களது உழைப்பால் தலைதூக்க செய்வதிலும் எமது கட்சி வரலாறு படைத்துள்ளது.
தமது வாழ்வாதாரத்துக்கான பொருளாதார ஈட்டல் எனச் சொல்லிக்கொண்டு இந்த தேசத்திற்காக துப்புரவுப் பணிகளிலிருந்து பொருளாதார வல்லநர்கள் வரை உழைக்கும் பாமர மக்களுக்கு அவரவர் திறமைகளை இனங்கண்டு சந்தர்ப்பங்களை உருவாக்கி கொடுத்த பெருமையும் எமது கட்சிக்கு உண்டு.
அதேநேரம் வேற்றுமைகள் பாரபட்சங்கள் என்ற எண்ணக்கரு இல்லாது அனைவரது உழைப்பிற்கும் அதற்கேற்ற அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் எமது கட்சியின் தலைமை உறுதியாக உள்ளது.
இதனால் தான் அரச பதவிநிலைகளில் ஒரு குறிப்பிட்ட தரப்பினரை தவிர ஏனையோருக்கு அது எட்டாக்கனி என்றிருந்த காலச் சூழலை தகர்த்து பாமர மக்களும் அரச பதவிகளை அலங்கரிக்க செய்தவர் எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா. அதனால் தான் இன்றும் பாமர மக்களின் நாயகனாக அவர் வலம்வந்துகொண்டிருக்கின்றார்.
அந்தவகையில் இவ்வாண்டும் கடந்த ஆண்டுகளை போன்று உழைப்பாளர் தினம் வந்து போய்விட்டது. ஆனால் அந்த உழைப்பாளர் தினம் எடுத்துச் சொல்லிச் சென்றிருக்கும் உணர்வுகளையும், வரலாற்று படிப்பினைகளையும் நம் எமது செஞ்சங்களில் சுமந்தவர்களாக பேதங்களின்றி “ஒன்றே குலம் ஒருவதே தேவன்” என்ற சமூக ஒற்றுமையுடன் எமது எதிர்காலத்தை தூக்கி நிறுத்த இந்த உழைப்பாளர் தினத்தில் உறுதிபூணுவோம் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏற்றத் தாழ்வுகளற்ற எதிர்காலத்தை உருவாக்குவதே ஈ.பி.டி.பியின் நோக்கமாகும் - யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் ஜீவன் தெரிவிப்பு!
தான் எடுத்தக்கொண்ட பாதை வழியை எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இன்றுவரை தடம்புரளாது தொடர்ந்து வருவதால்தான் இன்று ஏழை எழிய மக்களின் வாழ் ஒளிபெற முடிந்தது என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்னன் அவரது நோக்கம் நிச்சயம் அதன் அடைவு மட்டத்தை எட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மே தின கூட்டங்கள் இம்முறையும் வழமைபோன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் அந்தந்த மாவட்டங்களின் கட்சி நிர்வாக பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.
குறிப்பாக வடக்கில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்றது. இதில் யாழ் மாவட்டத்தில் இன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் கட்சின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் மற்றும் உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோரது தலைமையில் ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வாக உழைப்பாளர்கள் சமூகத்திற்காக அர்ப்பணங்கள் செய்த உழைப்பாளர்களை நினைவு கூர்ந்து ஒரு நிமிட மௌன வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நிகழ்வின் ஆரம்ப அங்கமாக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தலைமை உரை நிகழ்த்தியிருந்தார்.
அவர் தனது தலைமை உரையில்,
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் அதன் தலைவரும் ஆரம்பகாலம் முதல் அதாவது அகிமிசை வழி போராட்ட காலத்திலும் சரி ஆயுத வழிமுறையூடான போராட்ட காலத்திலும் சரி அரசியல் ஜனநாயக வழிமுறையான நாடாளுமன்ற வழியூடாகவும் சரி மக்களின் எதிர்காலம் அவர்களது உழைப்பின் முக்கியத்துவம் ஆண், பெண் பேதங்களற்ற பன்முக சமத்துவம் ஏற்றத் தாழ்வுகளற்ற எதிர்காலத்தை உருவாக்கல் உள்ளிட்ட கொள்கைகளை முன்னிறுத்தியே தனது செயற்பாடுகளை செய்து வந்துள்ளது.
இதில் தான் எடுத்தக்கொண்ட பாதை வழியை எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இன்றுவரை தடம்புரளாது தொடர்ந்து வருவதால்தான் இன்று ஏழை எழிய மக்களின் வாழ் ஒளிபெற முடிந்தது என்றும் சுட்டிக்காட்டிய அவர் பாமர மக்கள் எத்துறையிலும் சாதிக்கவல்லவர்கள் என்ற நிலைய உருவாக்கி இலங்கையில் புரட்சிகரமான வேற்றுமையற்ற சூழ்நிலை உன்றை உருவாக்கி காட்டியுள்ளார் என்றும் தெரிவித்திருந்தார்.
பாமர மக்களின் வெற்றி பெறவேண்டுமென பாதை வகுத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - யாழ் மாவட்ட தொழிற் சங்கங்கள் கூட்டாக தெரிவிப்பு!
ஏழை உழைப்பாளர் வர்க்கத்தின் உதிரங்களை உறிஞ்சும் முதலாழித்துவத்தை உடைத்து பாமர மக்களின் வாழ்க்கைக்கு சிறப்பான வழிவகை செய்துகொடுப்பதால் தான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது நெஞ்சங்களில் கடவுளாக பார்க்கப்படுகின்றார் என யாழ் மாவட்ட தொழிற் சங்கங்கள் கூட்டாக தெரிவித்துள்ளன.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உழைப்பாளர் தின கூட்டத்தில் பல்வேறு தொழிற்துறைகளையும் உள்ளடக்கிய தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் தத்தமது அமைப்புகள் சார்பாக உரையாற்றியிருந்தனர. இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.
இதன்போது அவகள் மேலும் கூறுகையில்;
சிறுகடை வியாபாரமாக இருந்தாலும் சரி கடற்றொழில் மற்றும் பனை தென்னை சார் தொழிற் துறைகாளானாலும் சரி பல்கலைக்கழகம் மற்றும் கல்வித்துறை, ஆலயங்கள் உள்ளிட்ட ஏனைய தொழிற்துறைகளானாலும் சரி அத்துறையை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் நாளாந்தம் பல்வேறு துன்ப துயரங்களை சுமந்தவர்களாகவே தத்தமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான ஒரு சூழலில் அத்துறை சார்ந்த தொழிலாளர்கள் தமக்கான நியாயங்களையும் பிரச்சினைகளுக்கான தீர்வையும் பெற்றுக்கொள்வதற்காக அடைக்கலம் தேடும் கடவுளாக அமைச்சர் இருந்து செயற்பட்டு வருகின்றார்.
நாம் பிரச்சினைகள் என்று அடைக்கலம் தாருங்கள் ஓடிச் சென்றபோதெல்லாம் எம்மை அரவணைத்து நேர காலம் பார்க்காமல் எத்தகைய சவால் வரினும் கூட அவற்றை முறியடித்து நியாயங்களையும் தீர்வுகளையும் பெற்றுத்தந்துள்ளார்.
அத்தகைய ஒரு உழைப்பாளர்களின் காவலரை நாம் என்றும் மறந்தவிடப் போவதில்லை. கடந்த சில காலங்களில் தொழிற்சங்கங்கள் சில தவறானவர்களின் மாயைக்குள் அகப்பட்டு தவறான பாதை வழிமுறைகளை நாடிச் சென்றிருந்தனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் இறுதியில் ஏமாற்றங்களே மிஞ்சிக்கிடந்தது.
அதானால் தான் நாம் அதாவது உழைப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஊழைப்பாளர்களின் நலனுக்காக அன்றுமுதல் இன்றுவரை பாடுபடும் ஈபிடிபிகும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் முழுமையான ஆதரவையும் அரசியல் ரீதியான பலத்தையும் வழங்க இந்த உழைப்பாளர் தினத்தில் உறுதிபூணுவோம் என்றும் அவரது கரங்களை பலப்படுத்தினால் ஏழை மக்களின் வாழ்வு வசந்தம் பெறும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)