
posted 30th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - S
மூன்று நூல்களின் வெளியீட்டு விழா
நாகலிங்கம் நூலாலயம் ஆதரவில் வீணை மைந்தன் திரு.கே.ரி. சண்முகராஜா (கனடா) அவர்களின் நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (28) வெள்ளி யாழ். பல்கலைக்கழகத்திர் நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மண்ணும் மனசும், மறக்கத்தெரியாத மனசு, தமிழ் சினிமாவில் மகாகவி பாரதியின் பாடல்கள் ஆகிய நூல்கள் இவ்வாறு வெளியிடப்பட்டன.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்நாள் துணைவேந்தர் பேராசிரியர், கலாநிதி நாகலிங்கம் சண்முகலிங்கம் அவர்களது தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிறீ சற்குணராஜா அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட இந்நிகழ்வில், ரொறன்ரோ மனித நேயக் குரல் அமைப்பின் தலைவர் திரு.ஆர்.என். லோகேந்திரம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்ததுடன், இந்நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)