
posted 26th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மன்னார் மாவட்ட இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்துக்கான தொழிற்சந்தை
மன்னார் மாவட்ட இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்குடனும் மன்னார் மாவட்டத்தில் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்தவர்கள் மற்றும் பாடசாலையிலிருந்து இடைவிலகியவர்கள் தமது திறன்களை அடையாளம் கண்டு அதனூடாக தமக்கு பொருத்தமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான ஓர் நடவடிக்கையாக மன்னார் மாவட்ட செயலக ஏற்பாட்டில் மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு இடம்பெற்றது.
புதன் கிழமை (26) மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்ற இத்தொழிற் சந்தையை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் காலை 8.45 மணியளவில் சம்பிரதாய முறைப்படி ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட மற்றும் பிரதேச செயலக உயர் அதிகாரிகள், 'யூலிட்' நிறுவன திட்ட சிரேஷ்ட பிராந்திய முகாமையாளர் ஹேமந்த ஜெகத், சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சிரேஷ்ட முகாமையாளர் கமல் லியனகே, 'வொயிஸ்' நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி வசந்த புஸ்பகுமார மற்றும் பல நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்டத்தில் வேலை வாய்ப்புக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பல நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.
வழிகாட்டலினூடாக ஒவ்வொருவரும் உள்நாட்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்காகவும் உயர் கல்வியினூடாக தமது எதிர்காலத்தை வளப்படுத்துவதற்கும் எதிர்பார்த்துள்ள இளைஞர், யுவதிகள் தமது உயர் கல்வியை பெற்றுக்கொள்வதற்கான தளமாகவும் இது அமைந்திருந்ததுடன் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் வளவாளர்கள் வழிகாட்டியதாகவும் இது அமைந்திருந்தது.
ஏறத்தாழ 40ற்கும் அதிகமான உள்நாட்டு வெளிநாட்டு மற்றும் உயர்கல்வி வழங்கும் நிறுவனங்கள், பயிற்சி வழங்கும் நிறுவனங்கள், வியாபார ஊக்குவிப்பு செயற்பாடுகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் என பல தரப்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)