
posted 6th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மன்னார் மறைமாவட்டத்தில் வங்காலையில் இயேசுவின் திருப்பாடுகளின் காட்சி
மன்னாரில் மிகவும் பழமை வாய்ந்த கத்தோலிக்க கிராமங்களில் ஒன்றான வங்காலை புனித ஆனாள் ஆலய பங்கு மக்களால் செவ்வாய்கிழமை (04.04.2023) இயேசுவின் திருப்பாடுகள் காட்சியான ‘கல்வாரியில் காவியம்' காண்பிக்கப்பட்டது.
'கல்வாரியில் காவியம்' என்ற இயேசுவின் திருப்பாடுகளின் இக்காட்சியானது 2012 ஆண்டுக்குப் பின் 2023 ஆம் ஆண்டு மீண்டும் இது அரங்கேற்றப்பட்டது.
33 காட்சிகளைக் கொண்ட இக் 'கல்வாரி காவியத்தில்' இறைமகன் இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றது தொடக்கம் இறைமகன் கிறிஸ்து இயேசுவின் உயர்ப்பும் அதனைத் தொடர்ந்து இறைவனின் தாய் மரி அன்னையின் விண்ணுலகினதும், மண்ணுலகினதும் இராக்கினியாக முடி சூட்டப்பட்டது வரை காட்சிகளாகக் காண்பிக்கப்பட்டன.
கல்வாரியில் காவியத்தில் சுமார் இருநூறுக்கு மேற்பட்டோர் சேர்ந்து நடிப்பில் அரங்கேற்றினர்.
இந்நிகழ்வு செவ்வாய் கிழமை (04) இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு புதன்கிழமை காலை 5.14 மணி வரை இயேசுவின் திருப்பாடுகள் காட்சிகள் வங்காலை புனித ஆனாள் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வங்காலை பங்கு மக்களின் நடிப்பில் அரங்கேற்றப்பட்ட இத்திருப்பாடுகளின் காட்சியை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையின் இறை ஆசியுடன் ஆரம்பித்து வைத்தார்.
மன்னார் மறைமாவட்டத்தில் 50 பங்குகள் இருக்கின்றபோதும் இன்றைய பொருளாதார சிக்கல் காரணமாக ஏனைய பங்குகளில் திருப்பாடுகளின் காட்சி காண்பிக்கப்படாதபோதும் 2023 ஆம் ஆண்டு வங்காலை பங்கில் மாத்திரமே கத்தோலிக்கரின் தவக்காலத்தில் காண்பிக்கப்படும் கிறிஸ்துவின் திருப்பாடுகளின் காட்சி காண்பிக்கப்பட்டதும் பலராலும் போற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)