
posted 3rd April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மன்னார் நகர சபை தரம் உயர்வை வர்த்தமானியில் பிரசுரிக்கவும் - செல்வம் அடைக்கலநாதன்
மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவையிலிருந்து அங்கிகாரம் பெறப்பட்டிருக்கின்றபோதும் இதுவரை இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படவில்லையென வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காடடியுள்ளார்.
இது தொடர்பாக அடைக்கலநாதன் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது;
மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவையிலிருந்து அங்கிகாரம் பெறப்பட்டிருக்கின்றபோதும் இதுவரை இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படவில்லை.
இது தொடர்பாக தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன். எனவே, கூடிய விரைவில் இதனை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)