
posted 12th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மட்டக்களப்பில் “ஆனந்த ராகங்கள்” கவிதை நூல் வெளியீடு
மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்திய அமரர் ஆனந்தா ஏ.ஜீ. இராஜேந்திரத்தின் மூன்றாம் ஆண்டு நினைவிடை தோய்தலும் மகுடம் பதிப்பகத்தின் 69வது வெளியீடான ஆனந்தாவின் "ஆனந்தராகங்கள்" கவிதை நூல் வெளியீடு மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்பணி அகுஸ்தின் நவரட்ணம் அடிகளாரின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அருட்பணி போல் சற்குணநாயகம் அடிகளாரின் இறை ஆசியுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் வரவேற்புரையை செல்வி மெற்றில்டா ராஜேந்திரமும் நூல் வெளியீட்டுரையை மகுடம் வி. மைக்கல் கொலினும் ஆற்ற கவிதை நூலின் முதல் பிரதியை திருமதி சந்திரிகா ராஜேந்திரம் அருட்பணி போல் சற்குணநாயகம் அடிகளாருக்கு வழங்கிவைத்தார்.
நூல் தொடர்பான அறிமுகவுரையை கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி ரூபி வலண்டினா பிரான்சிஸ் ஆற்றினார். அமரர் ஆனந்தா ஏ.ஜீ. ராஜேந்திரம் தொடர்பான சிறப்புரையை புளியந்தீவு வின்சன்ட் டீ போல் சபை தலைவர் இக்னேசியஷ் சில்வெஸ்டர் ஆற்றினார்.
பெருந்திரளான மக்கள் கலந்து சிறப்பித்த இந் நிகழ்வு பிரதிக்சன் அன்ரூ ராஜேந்திரத்தின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)