
posted 4th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மட்டக்களப்பில் மே தினம்
"தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளக் கூடிய வகையில் சுயநிர்ணய உரிமையைப் பெறும் வரையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஜனனாயக வழியிலான அஹிம்சை வழிப் போராட்டம் தொடரும் " என்ற பிரகடனத்தை முன்வைத்து மட்டக்களப்பு களுவன்கேணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மேதினக் கூட்டம் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.பரமதேவா தலைமையில் இடம்பெற்றது.
இந்த மேதினக் கூட்டத்தில் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் இருந்து பெருந்திரளைனோர் கலந்து கொண்டனர்.
இந்த மேதினக் கூட்டத்தில் தமிழ் மக்களுக்கு நியாயமான நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வேண்டும். வடக்கு - கிழக்கில் தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் இடம்பெறும் நில அபகரிப்பு உடன் நிறுத்தப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உரிய பதில் அளிக்கப்பட வேண்டும். மீனவர். கால்நடை வளர்ப்போர் விவசாயிகள் உள்ளிட்ட தொழில் புரிவோர் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இந்த மேதினக் கூட்டத்தில் முன்னாள் பாராளுமனற உறுப்பினர் க. துரைராஜசிங்கம் (அண்ணாதாசன்) தலைமையில் "உழைப்பால் உயர்வோம்"என்ற தலைப்பில் கவியரங்கு இடம்பெற்றது. இக் கவியரங்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி. ஸ்ரீநேசன் பா. அரியநேத்திரன். கி. சேயோன். பகிரதன் ஆகியோர் கவிபாடினர்.
கதிரவன் இன்பராசா தலைமையில் பட்டிமன்றமும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணாக்கியன், த. கலையரசன் உட்பட பலர் உரையாற்றினர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)