
posted 7th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பேராசிரியர் ஹுசைன் மியா பேருரை
மறைந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரத்தின் நினைவையொட்டிய நினைவுப் பேருரை நிகழ்வு ஒன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது.
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் ஞாபகர்த்த மன்றத்தின் ஏற்பாட்டிலும், கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையுடனும் எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (09) பிற்பகல் 4 மணிக்கு இந்த நினைவுப் பேருரை நிகழ்வு நடைபெறவுள்ளது.
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் ஞாபகர்த்த மன்றத்தின் தலைவர் பேராசிரியர் தை. தனராஜ் தலைமையில், கொழும்பு தமிழ்ச் சங்க, சங்கர பிள்ளை மண்டபத்தில் நினைவுப் பேருரை நடைபெறும்.
நிகழ்வில் தாருஸ்ஸலாமிலுள்ள புரூணை பல்கலைக்கழகம், புளோரிடா பல்கலைக்கழகம் என்பவற்றின் ஓய்வு நிலைப் பேராசிரியர் பி.ஏ.ஹுசைன்மியா, “இலங்கையில் உயர் கல்வி ஒரு வரலாற்று நோக்கு” எனும் தலைப்பில் நினைவுப் பேருரையை ஆற்றவுள்ளார்.
மேலும், மேற்படி ஞாபகர்த்தமன்ற காப்பாளர் பேராசிரியர் மா. கருணாநிதி, நிகழ்வில் பேருரையாளர் பேராசிரியர் பி.ஏ.ஹுசைன்மியா பற்றிய அறிமுக உரையாற்றுவதுடன், ஞாபகர்த்த மன்ற செயலாளர் பேராசிரியர் ச. இந்திரகுமார் நன்றியுரையும் பகர்வார்.
தவிரவும் வித்தியாநிதி பேராசிரியர் சோ. சந்திரசேகரத்தின் நினைவாக, ஓய்வு நிலை பேராசிரியர் பி.ஏ.ஹுசைன்மியா “இலங்கையில் உயர் கல்வி – ஒரு விமர்சன நோக்கு” எனும் தலைப்பில் ஆற்றும் முதலாவது நினைவுப் பேருரை நூலுருவில் வெளியிடப்படவுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)