
posted 6th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பேசாலையில் புனித வியாழன் திருச்சடங்கு
கத்தோலிக்கருக்கு பரிசுத்த வாரம் இவ்வாரம். இந்த புனித வாரத்தில் புனித வியாழன் கத்தோலிக்க மக்களுக்கு பல மறை பொருள்களை சுட்டிக்காட்டியுள்ளது.
இவற்றில் மிகவும் முக்கியமானது புனித வியாழன். அன்று, இறை இயேசுவின் இறுதி இரவுணவும், நற்கருணையின் உருவாக்கமும் , பணிவாழ்வும் உருவாக்கப்பட்ட தினமாகும்.
இத் தினம் பேசாலை புனித வெற்றி அன்னை ஆலயத்தில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் திருச்சடங்கானது பேசாலை பங்குத் தந்தை அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளாரின் ஒழுங்கமைப்பிலும், அமல மரி தியாகி சபையைச் சார்ந்தவரும் மறை போதகருமான அருட்பணி ப. ஜெறோம் லெம்பேட் அடிகளாரின் பங்கு பற்றுதலுடன் பேசாலை உதவி பங்குத் தந்தை அருட்பணி எஸ். டிக்சன் அடிகளாரின் தலைமையில் கூட்டுத் திருப்பலியும் புனித வியாழன் திருச்சடங்கும் மாலையில் நடைபெற்றது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)