
posted 3rd April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பேசாலையில் குருத்தோலை தினக் கொண்டாட்டம்
அகில உலகத்தில் கத்தோலிக்க திருச்சபையானது குருத்தோலை ஞாயிறு தினத்தை 02.04.2023 அன்று நினைவு கூர்ந்தது.
இத் தினம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு முந்தைய ஞாயிற்றுக் கிழமைகளில் கொண்டாடப்படுகின்றது.
அதாவது, ஜெருசலேமுக்குள் இயேசுவின் வெற்றிகரமான பிரவேசத்தை கத்தோலிக்க மக்கள் கொண்டாடும் தினமே இத் தினமாகும்.
இத் தினத்தை பேசாலை புனித வெற்றி அன்னை ஆலய மக்கள் விற்றரிஸ் வளாகத்திலிருந்து குருத்தோலைகளை கையிலேந்தியவண்ணம் ஆரம்பித்து வெற்றி அன்னை ஆலயம் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பேசாலை பங்குத் தந்தை அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளாரின் ஏற்பாட்டில் உதவி பங்குத் தந்தை அருட்பணி எஸ். டிக்சன் தலைமையில் அமலமரி தியாகி சபை மறைபோதகர் அருட்பணி ப. ஜெறோம் லெம்பேட் அடிகளாரின் பங்கேற்றலுடன் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)