
posted 15th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
புனித ரமழான் மாதத்தில் போதைப்பொருள் பாவனையில் 09 பேர் கைது
புனித ரமழான் மாதத்தில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 09 பேர் நிந்தவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜேர்மன் நட்புறவு பாடசாலை அருகில் உள்ள பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமாக பலர் நடமாடுவதாக பொலிஸ் விசேட பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் தலைமையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது 9 சந்தேக நபர்கள் பல்வேறு போதை தரக்கூடிய பொருட்களுடன் கைதாகியுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்படி 9 நபர்களும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விலக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இரவு வேளைகளில் சந்தேகத்திற்கிடமாக நடமாடி ஆளடையாளங்களை உறுதிப்படுத்த தவறியவர்களும் சந்தேகத்தின் அடிப்படையில் தினமும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)