
posted 17th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
புதுக்குடியிருப்பில் நல்லிண இணக்க செயல்பாடாக மன்னார் மாவட்டம் தழுவிய இத்தார் நிகழ்வு
உலகம் பூராகவும் நோம்பு அனுஷ்டித்துவரும் இஸ்லாமிய மக்கள் இலங்கையில் தற்பொழுது திங்கள் கிழமை (17) 25வது நோம்புத் தினத்தை அனுஷ்டித்தனர்.
இந்நாளில் மன்னார் புதுக்குடியிருப்பு முகைதீன் ஜூம்மா பள்ளிவாசல் ஹார்மீன் தலைமையில் கொண்ட நிர்வாகம் நல்லிண இணக்க செயல்பாடாக மன்னார் மாவட்டம் தழுவிய ஒரு செயல்பாடாக திங்கள் கிழமை (17) புதுக்குடியிருப்பு பள்ளிவாசலில் இத்தார் நிகழ்வை நடாத்தினர்.
மன்னார் மாவட்டத்தில் இனம் மதம் வேறுபாடுகளற்ற ஒரு நல்லிணம் கொண்ட ஒரு மாவட்டம் என்பதை எடுத்துக்காட்டும் நோக்குடன் இன்றைய இவ் இத்தார் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, இந்து சமய தேசகீர்த்தி சிவஸ்ரீ மஹாதர்மகுமாரக் குருக்கள், பௌத்த மதத் தலைவர், மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல், பொலிஸ் அதிகாரிகள், உலமாக்கள், திணைக்கள உயர் அதிகாரிகள் உட்பட பள்ளி நிர்வாகம் மற்றும் மௌலவிமார், இஸ்லாமியக் கல்வி பாடத்திட்ட மாணவர்கள் என பலர் இவ் இத்தார் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் நான்கு மதத் தலைவர்கள் மன்னார் அரசாங்க அதிபர், ஹாதி நீதிபதி மௌலவி செய்னுல் ஆப்தீன் அஸீம் ஆகியோர் உரையாற்றினர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)