
posted 3rd April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
புதிய சட்ட நூலகம்
கல்முனை நீதிமன்ற கட்டடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டடத்தில் புதிய சட்ட நூலகம் சட்டத்தரணிகளின் பாவனைக்காக திறந்து வைக்கப்ப்பட்டது.
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எம். ஐ. றைசுல் ஹாதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி, கௌரவ அதிதிகளாக கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம். முஹம்மட் றியால், கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின் முதலில் அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்ட பின்னர் புதிய சட்ட நூலகம் அதிதிகளால் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
மத அனுஸ்டானம் இடம்பெற்றதை தொடர்ந்து கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எம். ஐ. றைசுல் ஹாதி 40 வருட காலத்தின் பின்னர் புதிய நூலக அமைக்கப்பட்ட வரலாறு அதற்கான உதவிகள் என்பன குறித்து தலைமையுரையில் குறிப்பிட்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)