
posted 20th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் முதலாவது கூட்டம்
2023 ம் ஆண்டிற்கான முதலாவது நானாட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வன்னி பாராளுமன்னற உறுப்பினரும் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கெளரவ காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.
மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் திரு. ஸ்ரீஸ்கந்த குமார் அவர்களின் நெறிப்படுத்துதலில் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய் கிழமை (18) நடைபெற்றபோது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் மற்றும் திணைக்கள தலைவர்கள் அரச பதவிநிலை உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்
இவ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குடிநீர், மருத்துவம், விவசாயம், மேய்ச்சல் தரை, வீதி அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல முக்கியமான விடயங்கள் பற்றி கூடிய கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டன.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)