
posted 25th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பாரிய தோல்வி
தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து அழைப்பு விடுத்த இன்றைய ஹர்த்தால் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பாரிய தோல்வியை கண்டுள்ளது என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
இன்று வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கும்படி ஏழு தமிழ் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. இந்த ஹர்த்தாலுக்கு ரவூப் ஹக்கீமின்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிசாத் பதியுதீனின் மக்கள் காங்கிரஸ், மனோ கணேசன் போன்றோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனாலும் இந்த ஹர்த்தால் தேவையற்றது என்றும் இது மக்களை ஏமாற்றி தங்கள் சொகுசு வாழ்க்கையை பலப்படுத்த முயலும் சுயநல கட்சிகளின் கோரிக்கை என்றும், கிழக்கில் அபகரிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் காணிகளை விடுவிக்காதவரை ஹர்த்தாலுக்கு ஒத்துழைக்க முடியாது என்றும் ஐக்கிய காங்கிரஸ் கட்சி மட்டுமே கூறியது.
தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கோரிக்கையை அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் மக்கள் குப்பையில் தூக்கி போட்டுள்ளனர். கல்முனை பஸார், கல்முனை சந்தை உட்பட பாண்டிருப்பு மற்றும் கல்முனை தமிழ் பகுதி, காரைதீவு என பல இடங்களிலும் வழமை போல் கடைகள் திறக்கப்பட்டு இயங்கியதை காண்கிறோம்.
இதன் மூலம் தமிழ், முஸ்லிம் கட்சிகள் தம்மை ஏமாற்றி அவர்கள் சொகுசு வாழ்விலும் சொகுசு பயணங்களிலும் ஈடுபடுவதற்காகவே இவ்வாறு மக்களை உசுப்பேற்றுகிறார்கள் என்பதை கிழக்கு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
எம்பீக்கள் தமது சம்பளங்களை குறைவின்றி பெற வேண்டும், ஹர்த்தால் செய்து பொது மக்கள் மட்டும் பட்டிணி கிடக்க வேண்டுமா என மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
தமிழ் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் இவ்வாறு மக்களை உசுப்பேற்றுவதில்தான் ஒற்றுமைப்படுகின்றார்களே தவிர, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒருபோதும் ஒற்றுமைப்படுவதில்லை. காரணம் மக்களை முட்டாளாக்கி தத்தம் வாக்குகளை காப்பாற்றவே நினைக்கின்றனர்.
தமிழ் பேசும் மக்கள் ஹர்த்தாலை நிராகரித்ததன் மூலம் இந்த எண்ணங்கள் கொண்ட இவர்கள் முகங்களில் உமிழ்ந்துள்ளனர் என்பதே உண்மையாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)