பாடசாலை மாணவர்களின் வருகை விழுக்காட்டின் காணங்களின் ஆய்வு

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தலைமன்னார் பகுதியில் கல்விக் கற்கும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு சீரான முறையில் செல்லாததும், இடைவிலகலும் தொடர்பாக ஆராயப்பட்டது.

தலைமன்னாரில் ஐந்து கிராம அலுவலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் தலைமன்னார் பிரதேச பகுதியில் தலைமன்னார் பியரில் இரண்டு பாடசாலைகளும் , தலைமன்னார் சந்தியில் ஒரு பாடசாலையும், தலைமன்னார் கிராமம் மேற்கு பகுதியில் ஒரு பாடசாலையும் மற்றும் கட்டுக்காரன்குடியிருப்பில் ஒரு பாடசாலையுமாக ஐந்து பாடசாலைகள் இயங்கி வருகின்றன.

இப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் பாடசாலைகளுக்கு செல்வதிலுள்ள ஒழுங்கீனம், இடைவிலகல் போன்றவற்றை கவனத்தில் எடுக்கப்பட்டு இவை தொடர்பாக தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

இக் கூட்டத்தில் பாடசாலை அதிபர்கள், சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள், கிராம அலுவலகர்கள், சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் என இது தொடர்பான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறாக இனம் காணப்படும் மாணவர்களை பாடசாலை அவிருத்திக்குழு மூலம் இனம் காணப்பட்டு கிராம அலுவலகர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து செயல்பட்டு இம் மாணவர்களின் இவ்வாறாக வருகையில் விழுக்காடு ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து பிரதேச செயலாளருக்கூடாக அவர்களின் பிரச்சனைகளை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடி, வகுப்பேற்றப்படாத நிலையினில் ஏற்புடும் உளத் தாக்கங்கள் ஆகியன தற்பொழுதுள்ள காரணங்களாக அறியப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்களின் வருகை விழுக்காட்டின் காணங்களின் ஆய்வு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)